சைலன்ட் ஆக Redmi பார்த்த வேலை! "சார்ஜர் இல்லாமல்" ஒரு வொர்த் ஆன Phone!

|

"சார்ஜர் இல்லாமல்" என்றதுமே... வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்! ஒரு லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது, ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இல்லாமல் வருகிறது!

சார்ஜர் இல்லை என்றாலும் கூட அதுவொரு மேட்டரே இல்லை! ஏனெனில் நாம் பார்க்கப்போகும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விலையும், அம்சங்களும் அப்படி!

அப்படி என்ன மாடல்?

அப்படி என்ன மாடல்?

அது Redmi Note 11 SE ஸ்மார்ட்போன் ஆகும், இது ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று (நாளை) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெட்மி நோட் 11 சீரீஸின் கீழ் ஏற்கனவே Redmi Note 11, Redmi Note 11S, Redmi Note 11T 5G, Redmi Note 11 Pro மற்றும் Redmi Note 11 Pro+ 5G போன்ற மாடல்கள் அறிமுகமாகி விட்ட நிலையில், ரெட்மி நோட் 11எஸ்இ ஆனது இந்த சீரிஸின் கீழ் இணையும் "புதிய உறுப்பினராக" இருக்கும்!

Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!

Redmi Note 11SE மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Redmi Note 11SE மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Mi.com வலைதளத்தில், Redmi Note 11SE ஸ்மார்ட்போனின் முழு வடிவமைப்பு மற்றும் மொத்த அம்சங்களையும் வெளிப்படுத்தும் "தயாரிப்புப் பக்கம்" ஏற்கனவே 'லைவ்' ஆக உள்ளதால், ரெட்மி நோட் 11எஸ்இ-யில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை!

அந்த Product Page-ஐ பார்க்கும் போதே, Redmi Note 11SE ஆனது, இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "அதே" Redmi Note 10S ஸ்மார்ட்போன் என்பதை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது!

ஆகஸ்ட் 31 முதல் வாங்க கிடைக்கும்... ஆனால்

ஆகஸ்ட் 31 முதல் வாங்க கிடைக்கும்... ஆனால் "அது" இருக்காது!

இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 31 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என்பதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

இருப்பினும், முன்னரே குறிப்பிட்டபடி Redmi Note 11SE ஸ்மார்ட்போன் ஆனது சார்ஜருடன் வராது, சார்ஜர் இல்லை என்பதால் இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் கேபிளும் இருக்காது என்று நினைத்துவிட வேண்டாம்; கேபிள் இடம்பெறும்!

Samsung-இன் இந்த பெஸ்ட் பட்ஜெட் போன்.. இனிமேல் ரூ.9,514 மட்டுமே!Samsung-இன் இந்த பெஸ்ட் பட்ஜெட் போன்.. இனிமேல் ரூ.9,514 மட்டுமே!

ரீடெயில் பாக்ஸில் வேறு என்னென்ன இருக்கும்?

ரீடெயில் பாக்ஸில் வேறு என்னென்ன இருக்கும்?

Xiaomi இணையதளத்தில் உள்ள பாக்ஸ் கன்டென்ட்ஸ் (Box contents) பிரிவின் படி, ரெட்மி நோட் 11SE ஆனது சார்ஜருடன் வராமல் இருக்கலாம். ஆனால் அதில் போன், யூஎஸ்பி டைப்-சி கேபிள், சிம் இஜெக்டர் டூல், ப்ரொடெக்டிவ் கேஸ், க்விக் ஸ்டார்ட் கைடு மற்றும் வாரன்டி கார்டு ஆகியவைகள் இருக்கும்.

பாக்ஸில் சார்ஜிங் அடாப்டர் இல்லாமல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இதுவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ரெட்மி நோட் 11SE ஆனது 60Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட்-ஐ கொண்ட 6.43-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ G95 SoC மூலம் இயக்கப்படுகிறது.

6GB / 8GB LPDDR4x ரேம் மற்றும் 64GB / 128GB UFS 2.2 ஸ்டோரேஜை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த MIUI 12.5 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் உயிரோட இருந்து.. இதை பார்த்து இருந்தா? எப்படி இருக்கும்?

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிற அம்சங்கள் பற்றி?

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பிற அம்சங்கள் பற்றி?

33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் IP53 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இதில் VoLTE மற்றும் VoWiFi உடனான 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் v5.0, ஜிபிஎஸ், என்எஃப்சி, இன்ஃப்ராரெட் போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன.

கேமராக்கள் எப்படி இருக்கும்?

கேமராக்கள் எப்படி இருக்கும்?

கேமராக்களை பொறுத்தவரை, Redmi Note 11SE ஆனது 64MP மெயின் கேமரா + 8MP அல்ட்ராவைடு கேமரா + 2MP மேக்ரோ சென்சார் + 2MP டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை முன்பக்கதில் உள்ள 13MP கேமரா பார்த்துக்கொள்ளும்!

விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?

இந்தியாவில் Redmi Note 11 SE-யின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

இந்தியாவில் Redmi Note 11 SE-யின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை, சியோமி நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,690 முதல் ரூ.15,000 க்குள் எங்காவது ஒரு புள்ளியில் "அமரும்" என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்!

Best Mobiles in India

English summary
First Budget Phone From Xiaomi to Skip Charger in Box Redmi Note 11 SE India Launch August 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X