Home
Mobile

இப்படி ஒரு போன் வருவது இதுவே முதல் முறை.. டிஸ்பிளேவில் மினி கேப்சூல்.. பட்ஜெட் விலையில் Realme C55 அறிமுகம்!

இப்படி ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (Android Smartphone) அறிமுகமாவது இதுவே முதல் முறை என்று கூறும் அளவிற்கு, மினி கேப்சூல் (Mini Capsule) என்கிற புத்தம் புதிய அம்சத்துடன் ரியல்மி சி55 (Realme C55) ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மார்ச் 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் ரியல்மி சி55-இல் உள்ள மினி கேப்சூல் என்கிற அம்சத்தின் வேலை என்ன? இதை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி பார்த்துவிடலாம். பின்னர் ரியல்மி சி55-யின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும் போன்ற விவரங்களை பார்ப்போம்!

டிஸ்பிளேவில் மினி கேப்சூல்.. பட்ஜெட் விலையில் Realme C55 அறிமுகம்!

மினி கேப்ஸ்யூல் என்றால் என்ன? நீங்களொரு ஐபோன் யூசராக இருந்தால் டைனமிக் ஐலேண்ட் பற்றிய விளக்கம் உங்களுக்கு தேவைப்படாது. டைனமிக் ஐலேண்ட் என்பது லோ பேட்டரி அலெர்ட், இன்கம்மிங் கால்ஸ், பிளே ஆகிக்கொண்டிருக்கும் மியூசிக் உட்பட பல்வேறு வகையான பேக்கிரவுண்ட் வேலைகளை பற்றிய நோட்டிஃபிக்கேஷன்களை, டிஸ்பிளேவின் மேல்பகுதியில் காட்சிப்படுத்தும் ஒரு அம்சமாகும்.

இதேபோன்ற ஒரு அம்சம் ரியல்மி சி55 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் ரியல்மி இதை 'மினி கேப்சூல்' என்று அழைக்கிறது. இது பேட்டரி லெவல், ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் டேட்டா யூசேஜ் போன்றவைகளை காட்சிப்படுத்துகிறது. இந்த அம்சம் செட்டிங்ஸ் > ரியல்மி லேப்ஸ் > மினி கேப்ஸ்யூல் வழியாக அணுக கிடைக்கிறது.

ரியல்மி சி55 விலை மற்றும் விற்பனை: ரியல்மி சி55 ஸ்மார்ட்போனானது மொத்தம் 3 ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் +128ஜிபி உடன் வரும் டாப்-எண்ட் மாடல் ரூ.13999 க்கும் வாங்க கிடைக்கும்.

சன் ஷவர் மற்றும் ரெய்னி நைட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள ரியல்மி சி55 ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற மார்ச் 28 ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும். வழக்கம் போல இந்த ரியல்மி போனும் ரியல்மி.காம் (Realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படும்.

ரியல்மி சி55 அம்சங்கள்: இது மிகவும் மெலிதான (7.89மிமீ) மற்றும் இலகுவான (189.5 கிராம்) வடிவமைப்பை கொண்டுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) உடன் வருகிறது.

4ஜி/எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், டேட்டா டிரான்ஸ்ஃபர் மற்றும் சார்ஜிங்கிற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டிகளை வழங்கும் ரியல்மி சி55 ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சுவாரசியமாக இந்த போனுடன் 33W சூப்பர்வூக் வயர்டு சார்ஜரும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடைசியாக, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் எக்ஸ்டென்க்ஷனை (Storage Extension) ஆதரிக்கும் ரியல்மி சி33 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரண்ட் ரீடர் (Finger Print Reader) ஒன்றும் உட்பொதிக்கப்பட்டுள்ளது; அது இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டனாகவும் (Power Button) செயல்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First Android Phone With Mini Capsule Realme C55 Launched in India For Rs 10999 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X