Home
Mobile

முதல் 100 பேருக்கு இலவச Nothing Headphone 1.. ஜூலை 15 க்கு முன்பாகவே Nothing Phone 3 ஸ்பெஷல் சேல்!

நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான நத்திங் போன் 3 (Nothing Phone 3) வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நத்திங் நிறுவனம் இந்தியாவிற்கான ஒரு பிரத்யேக டிராப் ஈவென்டை (Drop Event) அறிவித்துள்ளது.

இந்நிகழ்வின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் நேரடி அனுபவம் மட்டுமின்றி ஜூலை 15 தொடங்கும் ஓப்பன் சேலுக்கு முன்னதாகவே அதை வாங்கும் வாய்ப்பையும் கொடுக்கும். பெங்களூரில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் ஹெட்ஃபோன் 1 மாடல் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச Nothing Headphone 1.. Nothing Phone 3 ஸ்பெஷல் சேல்!

இந்நிகழ்வை ஜூலை 12 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெங்களூருவின் யுபி சிட்டியில் நடத்தப்போவதாக நத்திங் ஒரு செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. என்ட்ரியை பொறுத்தவரை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை இருக்கும். அவர்கள் ஒரு சவாலிலும் பங்கேற்கலாம், அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டசாலிகள் ரூ.21,999 மதிப்புள்ள நத்திங் ஹெட்ஃபோன் 1-ஐ வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள்.

ஆனால் இந்த நிகழ்வின் மிகப்பெரிய சிறப்பம்சம் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விற்பனை தான். இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விற்பனைக்கு வருவதற்கு முன்பு இந்நிகழ்வின் விருந்தினர்கள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இதற்காக காத்திருப்புப் பட்டியலோ அல்லது முன்பதிவோ தேவையில்லை என்பதையும் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு இலவச நத்திங் ஹெட்ஃபோன் 1 கிடைக்கும்.

நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் ஈவென்ட்டை நடத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் லிமிடட் டிராப் ஈவென்ட் நடந்தது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் நத்திங் போன் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு விழாவிலும், உலகில் வேறு எவருக்கும் முன்பாக கம்யூனிட்டி மெம்பர்களுக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K ரெசல்யூஷன் , 4500 நிட்ஸ் (HDR) மற்றும் 1600 நிட்ஸ் (HMB) வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங், 92.89% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட 4என்எம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட பிரைம் செயல்திறன் கொண்ட குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பழைய நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இது ஜிபியு, மல்டி டாஸ்கிங், இமேஜ் ப்ராசஸிங் மற்றும் கிராபிக்ஸ் ஹேண்ட்லிங்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். சிபியு சக்தியில் 36% அதிகரிப்பு, 88% ஜிபியு மேம்படுத்தல், ஏஐ தொடர்பான பணி செயலாக்கத்தில் 60% அதிகரிப்பு என.. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை சிரமமில்லாத அனுபவங்களை செயல்படுத்தும்

கேமராக்களை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ட்ரூலென்ஸ்எஞ்சின் 4 மற்றும் 4கே அல்ட்ரா எக்ஸ்டிஆர் வீடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இது 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், இது வெறும் 54 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
First 100 Buyers Get Free Nothing Headphone 1 Nothing Phone 3 Drop Event in Bengaluru on July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X