Home
Mobile

நிஜமாவே ஃபயர் மாதிரி.. வெறும் ரூ.2499 போதும்.. ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச்.. AMOLED டிஸ்பிளே.. 9 டேஸ் பேட்டரி!

பட்ஜெட் விலையில் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் 9 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பக்காவான அம்சங்களுடன் ஃபயர் போல்ட் (Fire Boltt) நிறுவனத்தின் ஃபயர் போல்ட் சோலரிஸ் (Fire Boltt Solaris) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவொரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன் வாட்ச் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அதேபோல இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வருவதால், இயர்பட்ஸ் இல்லாமலேயே கால் பேசிக்கொள்ள முடியும். இந்த வாட்ச்சின் முழு அம்சங்கள், விற்பனை தேதி மற்றும் சலுகை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பட்ஜெட்டில் ப்ளூடூத் ஸ்மார்ட்வாட்ச்! AMOLED டிஸ்பிளே! 9 டேஸ் பேட்டரி!

பயர் போல்ட் சோலரிஸ் அம்சங்கள் (Fire-Boltt Solaris Specifications): இந்த ஃபயர் போல்ட் வாட்ச் கண்களை கவரும் வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி (Stainless Steel Body) கொண்டுள்ளது. இந்த வாட்ச்சின் டிஸ்பிளே மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. 1.78 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (cloud-based watch faces) கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) அம்சம் வருகிறது. ஆகவே, இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் (Inbuilt Mic and Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கால் ஹிஸ்டரி (Call history), குயிக் டயல் பேட் (Quick dial pad) மற்றும் சின்க் கான்டாக்ட்ஸ் (Sync contacts) சப்போர்ட் வருகிறது.

123+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports modes) வருகின்றன. இதில் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங், ஸ்கேட்டிங் உள்ளிட்ட முக்கிய மோட்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் (Fire-Boltt Heath Suite) வருகிறது.

ஆகவே, ஸ்லீப்பிங் மானிட்டர் (Sleeping monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 monitor), ஹார்ட்ரேட் டிராக்கிங் மானிட்டர் (Heart rate tracking monitor) மற்றும் வுமன் ஹெல்த் மானிட்டர் (Women health monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு டிரிங்கிங் வாட்டர் மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Drink water and sedentary remainder) வருகிறது.

இந்த போனின் கால் (Call), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஆப் (App) நோட்டிஃபிகேஷன்களை தெரிந்துகொள்ள ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் வருகிறது. மேலும், வெதர் அப்டேட் (Weather update), கால்குலேட்டர் (calculator), மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல் (music and camera control), அலாரம் (alarm), டைமர் (timer) மற்றும் ஸ்டாப்வாட்ச் (stopwatch) போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஃபயர் போல்ட் சோலரிஸ் வாட்ச்சில் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust and water resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்த ஃபயர் போல்ட் வாட்ச் காப்பர் க்ளோவ் (Copper Glow), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் ஸ்டெர்லிங் சில்வர் (Sterling Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த வாட்ச்சின் விலை ரூ.2,499 ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அறிமுக சலுகையாகும் அடுத்த சில வாரங்களில் மீண்டும் அதிகரிக்கக்கூடும். இந்த ஃபயர் போல்ட் சோலரிஸ் வாட்ச் அமேசான் (Amazon) மற்றும் ஃபயர்போல்ட்.காம் (Fireboltt.com) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இதன் விற்பனை நாளை (செப்டம்பர் 16) பிற்பகல் 12 மணி முதல் தொடங்குகிறது. பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக், நல்ல பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஃபயர் போல்ட் மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Fire-Boltt Solaris with AMOLED display, Bluetooth Calling Launched Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X