808-பியூர்வியூ ஸ்மார்ட்போனுடன் ஃபோட்டோ ப்ரின்டர் இலவசம்!

By Super
|

808-பியூர்வியூ ஸ்மார்ட்போனுடன் ஃபோட்டோ ப்ரின்டர் இலவசம்!
ஃபைன்பிக்ஸ் ஐபி-10 ப்ரின்டரை இலவசமாக நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனுடன் வழங்குகிறது இன்டியாடைம்ஸ் வலைத்தளம்.

அகன்ற திரை மற்றும் சிறப்பான கேமரா இருக்க வேண்டும் என்பது ஸ்மார்ட்போனை விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்பும் விஷயமாகிவிட்டது.

இதனால் ஸ்மார்ட்போனில் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடித்த ஸ்மார்ட்போன் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் என்று கூறலாம்.

41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனுடன், ஃபைன்பிக்ஸ் ஐபி-10 ப்ரின்டர் இலவசம் என்பது எலக்ட்ரானிக் சாதனத்தை விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம்.

இத்தகைய இலவசத்தினை வழங்குகிறது இன்டியாடைம்ஸ் வலைத்தளம். நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ரூ. 31,999 விலை கொண்டது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரூ. 6, 984 மதிப்புள்ள ஃபோட்டோ ப்ரின்டரை இலவசமாக பெறலாம்.

இன்டியாடைம்ஸ் வலைத்தளத்தில் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் மற்றும் ப்ரின்ட்டர் ஆகிய இரண்டையும் சேர்த்து ரூ. 34,499 விலையில் பெற முடியும். இதனால் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரூபாய் மிச்சமாக்கப்படுகிறது எனலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X