Home
Mobile

ரூ.12,999/-க்கு ஹானர் 7எக்ஸ்: நம்பி வாங்க 7 காரணங்கள்.!

இது நடுத்தர பிரிவில் கிடைக்கும் ஒரு புரட்சிகரமான ஸ்மார்ட்போன் என்பதை அதன் அம்சங்களை அறிந்துகொண்ட பின்னர் நீங்களே உணர்வீர்கள்.

By Muthuraj

இந்திய சந்தையில் திறன்வாய்ந்த இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு பஞ்சமே இல்லை. இருப்பினும் கூட அவைகளில் எது மிகவும் சிறந்தது என்பதில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. அதிலும் ஒரு பட்ஜெட் விலைப்புள்ளியில் ஹை-எண்ட் அம்சங்களை கொண்ட சாதனத்தை கண்டறிவென்பது மிகவும் அசாத்தியமான காரியமாகும். அது மிகவும் சாத்தியமான ஒரு வடிவத்தை பெற்றால் அது - ஹானர் 7எக்ஸ் என்று தான் அழைக்கப்படும்.!

ரூ.12,999/-க்கு ஹானர் 7எக்ஸ்: நம்பி வாங்க 7 காரணங்கள்.!

ஹானர் 7எக்ஸ்-ன் அடிப்படை சேமிப்பு மாதிரியான 32 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.12,999/- என்கிற விலைமதிப்பை பெற்றுள்ளது. இது நடுத்தர பிரிவில் கிடைக்கும் ஒரு புரட்சிகரமான ஸ்மார்ட்போன் என்பதை அதன் அம்சங்களை அறிந்துகொண்ட பின்னர் நீங்களே உணர்வீர்கள்.!

நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பு

நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பு

ஹானர் 7 எக்ஸ் சந்தையில் கிடைக்கக்கூடிய மெல்லிய மற்றும் லேசான இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இக்கருவி ஒரு யூனிபாடி உலோக வடிவமைப்பு கொண்டுள்ளது. மற்றும் ஒரு சுத்தமான மற்றும் சமச்சீர் வடிவமைப்பு அணுகுமுறையை கையாண்டுள்ளது. சியோமி, நோக்கியா மற்றும் மோட்டோரோலா மற்றும் சில பிரபலமான இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போகளை போல் அல்லாமல் இன்றைய காலகட்டத்துடன் இந்த வடிவமைப்பு ஒற்றுப்போகிறது. ஹானர் 7எக்ஸ் எட்ஜ் டூ எட்ஜ் மற்றும் 18: 9 என்கிற திரை விகிதத்திலான டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் வட்டமான மூலைகள் மற்றும் பொத்தான்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர் சரியான இடத்திலும் இருப்பதால், மிகவும் பணிச்சூழலியல் மிக்க இடங்களில் வசதியான பிடிமானத்தை வழங்குகிறது.

எட்ஜ்-டு-எட்ஜ் எச்டி+ டிஸ்ப்ளேவின் காட்சி அனுபவம்

எட்ஜ்-டு-எட்ஜ் எச்டி+ டிஸ்ப்ளேவின் காட்சி அனுபவம்

ஹானர் 7எக்ஸ் அதன் டிஸ்பிளே துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலை பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5.93 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒரு மிருதுவான ஐபிஎஸ் எல்சிடி திரையானது சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. மல்டிமீடியா மற்றும் கேம் ஆர்வலர்களுக்கு ஒரு சரியான ஸ்மார்ட்போனாக திகழும் இக்கருவி திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்யும் போதும், தீவிர கேம்ஸ்களை விளையாடும்போது இதன் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளேவானது அதிர்ச்சியூட்டும் கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும். அதற்கு பிரதான காரணியாக இதன் மெல்லிய பெஸல்கள் திகழும்.

திறன்மிக்க இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு

திறன்மிக்க இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு

உங்களின் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை வேறொரு உச்சத்திற்கு ஹானர் 7 எக்ஸ் கொண்டுசெல்லுமென்பது உறுதி. இது நிறுவனத்தின் 5-வது தலைமுறை இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பாகும். இதன் இரட்டை கேமரா அமைப்பானது 16எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம்நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது, இது பொக்கே விளைவு காட்சிகளை வழங்குவதற்கு ஆழமான புகைப்படங்களை பதிவு செய்யும். மறுகையில் போர்ட்ரெயிட் முறையுடனான 8எம்பி செல்பீ கேமரா ஒன்று உள்ளது.

நீண்ட நேர ஆயுள் வழங்கும் பேட்டரி

நீண்ட நேர ஆயுள் வழங்கும் பேட்டரி

ஹானர் 7எக்ஸ், ஒரு 3340எம்ஏஎச் என்கிற பேட்டரித்திறனை கொண்டுள்ளது, இது மிதமான மற்றும் கனரக பயன்பாடு என இரண்டையும் எந்த கவலையும் இல்லாமல் சமாளிக்கிறது. இதன் லாங் லாஸ்டிங் பேக்-அப் என்கிற பயனுள்ள மென்பொருளானது ஆப்ஸ்களின் செயல்பாட்டை புத்திசாலித்தனமாகக் கையாள்கிறது. இது ஹேண்ட்செட் பேட்டரி அலகுக்கு மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாக இதன் 'பவர் ஷேவிங் மோட்' மற்றும் 'அல்ட்ரா பவர் ஷேவிங் மோட்' ஆகியவை பின்னணி பயன்பாட்டு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது, மின்னஞ்சல் தன்னியக்க ஒத்திசைவு, அமைப்பு ஒலியை முடக்குகிறது மற்றும் ஒப்பீட்டளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைப் செய்ய பேட்டரி சக்தியை பாதுகாக்க திரையின் காட்சி விளைவுகளையும் குறைக்கிறது.

பயனர் இடைமுகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் இஎம்யூஐ 5.1

பயனர் இடைமுகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் இஎம்யூஐ 5.1

நிறுவனத்திற்கு சொந்தமான எமோஷன் யூஐ 5.1 ஆனது ஸ்மார்ட்போனின் திறன்மிக்க மென்பொருள் துறையை கவனித்துக்கொள்கிறது. இது தனிப்பயனாக்கங்கள் மற்றும் பல நாகரீகமான மென்பொருள் சேர்த்தல்களின் ஆழமான நிலைமையைக் கொண்டிருக்கிறது. இது ஹானர் 7எக்ஸ் மிகவும் சிறப்பான தனிப்பயனாக்க அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக உருமாற்றுகிறது. நீங்கள் விரும்பும்படி ஹோம் ஸ்க்ரீன் பாணியைத் தேர்ந்தெடுக்கலாம்; சாப்ட் நேவிகேஷன் பொத்தான்களை தனிப்பயனாக்கலாம்.

ஸ்மார்ட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் வைஃபை ப்ரிட்ஜ்

ஸ்மார்ட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் வைஃபை ப்ரிட்ஜ்

ஹானர் 7எக்ஸ்-ல் பதிக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் ஒரு நிலையான பாதுகாப்பு சென்சாரை விட அதிகமான பணிகளை செய்கிறது. அதாவது அன்லாக் செய்யும் பணியை தவிர்த்து பல முக்கிய செயல்பாடுகளையும் செய்ய அனுமதிக்கிறது. ஒரு ஸ்மார்ட் பயோமெட்ரிக் ஸ்கேனரான இதை தொட்டுப்பிடிக்க புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முடியும். உடன் உள்வரும் அழைப்பிற்கு பதிலளிக்கவும், அலாரத்தை நிறுத்தவும், அறிவிப்பு பேனலை அணுகுவதற்கும், கேலரியில் உள்ள படங்களை உலவவும் அனுமதிக்கும். வைஃபை ப்ரிட்ஜ் அம்சமானது ஹானர் 7எக்ஸ்-ன் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். இது உங்கள் ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போனை ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றியமைக்கிறது, ஒரே நேரத்தில் 4 கருவிகளை ஹானர் 7எக்ஸ் உடன் இணைக்க உதவும்.

மென்மையான செயலாக்கம் மற்றும் பல்பணி

மென்மையான செயலாக்கம் மற்றும் பல்பணி

ஹானர் 7எக்ஸ் சில 'ரிச்' அம்சங்களை மட்டுமின்றி பாக்கெட் நட்பு விலைப்புள்ளியில் கிடைக்கும் ஒரு உயர் செயல்திறன்மிக்க சாதனமாகும். 4 ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு அருமையான ஆக்டா-கோர் 2.3ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 659 எஸ்ஓசி உடன் இணைந்து, அன்றாட மற்றும் தீவிர செயல்பாடுகளை இயக்க உங்களுக்கு கைகொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Find out why Honor 7X tops our list of best mid-range Android smartphone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X