ஒப்போ நிறுவனத்தின் "செல்பீ எக்ஸ்பெர்ட்" எனக்கூறப்படும் ஏ83 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு தீவிரமான மிட்-ரேன்ஞ் விலைப்பிரிவில், அதாவது ரூ.13.990/-க்கு அறிமுகமானது. இடைப்பட்ட விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகமானாலும் கூட ஒப்போ ஏ83 ஆனது ஹை-எண்ட் அம்சங்களுடன் கூடிய மிகவும் மேம்பட்டதொரு இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது.

குறிப்பாக இதன் முழு திரை வடிவமைப்பு, அதற்கு ஏதுவான பெஸல்லெஸ் குறைவு காட்சி மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஒப்போ எப்5 போன்ற செயற்கை நுண்ணறிவின்கீழ் இயங்கும் செல்பீ கேமரா போன்றவைகளை கூறலாம். இரட்டை கேமரா அமைப்பின் மீது பல நிறுவனங்கள் கவனம் செலுத்தும் போது, ஓப்போ இயந்திர கற்றல் சக்தி உதவியுடன் ஒற்றை லென்ஸ் கேமரா மூலம் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது. நம்ப முடியவில்லையா.? கட்டுரையின் முடிவில் ஒப்போ ஏ83 உடன் நீங்கள் ஒற்றுப்போவீர்கள்.
அறிவார்ந்த பொக்கே விளைவையும் வழங்குகிறது
முன்பக்கத்தில் ஒரு 8எம்பி செலிபி கேமரா மற்றும் பின்பக்கத்தில் ஒரு 13எம்பி முதன்மை கேமரா கொண்டுள்ள ஒப்போ ஏ83-ன் செல்பீ கேமராவானது ஏஐ (AI) சுயமதிப்பீட்டு தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது க்ரூப் செல்பீயின் போது தனித்தனியாக முகங்களை அடையாளம் கண்டு தனிப்பயனாக்கப்பட்ட அழகுபடுத்தல்களை (பியூடிப்பை) நிகழ்த்துகிறது. தவிர, ஒப்போ ஏ83-ன் செல்பீ கேமராவானது அறிவார்ந்த பொக்கே விளைவையும் வழங்குகிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில் இதன் பொக்கே விளைவுகளானது இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புகளை விட சிறப்பாக உள்ளது. மேலுமொரு சிறப்பம்சமாக ஒப்போ ஏ83 ஆனது கைரேகை சென்சருக்குப் பதிலாக 'முக அடையாள' அம்சத்துடன் வருகிறது.
செயற்கை நுண்ணறிவு - ஏன்.?
ஒப்போ நிறுவனமானது அதன் ஸ்மார்ட்போன்களோடு சேர்த்து பல புரட்சிமிக்க அம்சங்களையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அதிலொன்று தான் செல்பீ கேமராவில் இடம்பெறும் 'செயற்கை நுண்ணறிவு' ஆதரவு. நிறுவனத்தின் இந்த ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் செல்பீ கேமராக்கள் உங்களின் கேமரா அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை கண்களால் பார்த்தால் மட்டுமே உங்களால் உணரமுடியும்.
இதன் நிலையான கற்றல் செல்பீக்களை மேம்படுத்தும்
ஒப்போ நிறுவனத்தின் படி, ஒப்போ ஏ 83 ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவனது இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பமானது தோலின் தொனி, வயது, பாலினம் மற்றும் தோல் நிறம் ஆகியவற்றை அங்கீகரிக்க உதவுகிறது. மேலும் அவை தனித்தனியாக பொருத்தமான மற்றும் நேர்மையான அழகுபடுத்தல்களை சந்திக்கிறது. இதன் சிக்கலான ஏஐ அல்காரிதமானது வயதான மற்றும் பாலின அடிப்படையில் கூட வேறுபாடுகளை கண்டறியும் திறனை கொண்டதாக உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு தனியான மற்றும் பெண்களுக்கு தனியாகவென பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. ஆண்களுக்கு முக வடிவம் மற்றும் சுள்ளிக்கட்டை போன்ற விரிவான முக அம்சங்களை ஆய்வு செய்யும் ஒப்போ ஏ83 ஆனது பெண்களுக்கு உண்மையான வண்ணங்களைத் தக்கவைத்து, பொட்டு போன்ற பாரம்பரிய விவரங்களைக் கையாளுகிறது.
மிருதுவான மற்றும் மேம்பட்ட செல்பீக்கள்
இதன் ஆழமான இயந்திர கற்றல் முடிவுகள் மறுகையில் அனுதினமும் சேகரிக்கப்படுவதால், மனித முகங்களின் பாரிய உலகளாவிய படத்தொகுதிகளின் தகவல் சேகரிகப்பட்டு, பல்வேறு நபர்களின் முகங்களை மற்றும் முகபாவங்களைக் கற்று தேர்ந்து கொண்டே இருப்பதால் ஒப்போவின் ஏஐ செல்பீ தொழிநுட்பமானது ஒரு நிலையான அடிப்படையில் மேம்பட்டுக்கொண்டே இருக்கும். இதன் அர்த்தம் ஏஐ பியூட்டி டெக்னாலஜி பொருத்தப்பட்ட ஒப்போ ஏ83-ன் செல்பீ கேமராவானது, சிக்கலான ஒளி நிலைமைகள் மற்றும் சிக்கலான பின்னணியில் கவனம் செலுத்துவதோடு சேர்த்து இன்னும் அதிக சுய விவரத்தையும் வழங்கும்.
தனிப்பயனாக்கப்பட்ட பியூடிப்பை எபெக்ட்ஸ்
மேலும் ஒப்போ ஏ83 ஆனது ஆண்களுக்கான செல்பீயில் பெண்களுக்கான மேம்பாடுகள் நிகழ்வதையும் தடுக்கும்; தவிர்க்கும். சுமார் 200 முகங்களை வரை வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்ட, தனித்தன்மை வாய்ந்த இதன் கேமரா அதற்கேற்றபடி அழகு விளைவைகளை வழங்கும்.இப்படியாக ஒப்போ ஏ83 செல்பீயின் வெளியீடானது மிகவும் துல்லியமான 'ஸ்கின் டோனாய் உறுதி செய்யவதோடு தேவையற்ற கறைகளை நீக்கி மிகவும் இயற்கையான வண்ணங்களையும் உறுதி செய்கிறது.
சுவாரஸ்யமான பில்டர்ஸ்
ஏஐ செல்பீ தொழில்நுட்பத்தைத் தவிர, ஒப்போ ஏ83-ன் செல்பீ கேமராவானது முன்னர் குறிப்பிட்டுள்ளபடி பொக்கே விளைவுகளை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது மற்றும் ஒரு இயற்கை பூச்சுகளை கொடுக்கும் வண்ணம் சுவாரஸ்யமான பில்டர்ஸ்களையும் கொடுக்கிறது. இந்த பில்டர்ஸ், தொழில்நுட்ப செயல்முறைகளில் ஒரு சரியான தோற்றமுள்ள செல்பீயை வழங்குவதோடு பொருந்தக்கூடிய சிறந்த செயல்முறைகளின்கீழ் அழகு விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது வெவ்வேறு தோல், முக கட்டமைப்புகள் மற்றும் முக அம்சங்கள் ஆகியவற்றில் அழமான ஆய்வு செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பொருள்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.