Galaxy S25 Edge-ஐ ஓரங்கட்டு.. Samsung-ன் சிறப்பு சம்பவம்.. Selfie-ல் செம்ம டிவிஸ்டு உடன் இன்னொரு S25 மாடல்!
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலுடன் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸை முடிவுக்கு கொண்டு வருகிறது என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அது தவறு. இந்த சீரிஸில் இன்னொரு மாடல் பாக்கி இருக்கிறது. அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) மாடல்.
இது செப்டம்பர் அல்லது அக்டோபர் 2025 இல் அறிமுகம் செய்யப்படும் ஏன்னு எதிர்பார்க்கப்படுகிறது. பழைய எப்இ மாடல்களுடன் ஒப்பிடும் போது 2025 மாடல் கொஞ்சம் ஸ்பெஷல் ஆனதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சாம்சங் நிறுவனம் "ஒருவழியாக" அதன் 10 எம்பி செல்பீ கேமராவை கைவிட திட்டமிட்டுள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலில் 12எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ மாடலின் செல்பீ கேமராவும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் செல்பீ கேமராவும் ஒரே போல் இருக்கும் நினைவூட்டும் வண்ணம் கடந்த இரண்டு வருடங்களாக எப்இ மாடல்களில் 10எம்பி செல்பீ கேமராக்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நினைவூட்டும் வண்ணம் எஸ்23 எப்இ மற்றும் எஸ்24 எப்இ ஆகியஇரண்டும் 10எம்பி சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டன. ஒருவழியாக இந்த பிராண்ட் அதை அதிக ரெசல்யூஷன் உடன் மேம்படுத்துகிறது; இருப்பினும் ரியர் கேமரா செட்டப்பில் உள்ள 50எம்பி ப்ரைமரி சென்சாரில் எந்த மாற்றமும் இருக்காது.
அதாவது எஸ்25 எப்இ மாடலில் எஸ்23 எப்இ மற்றும் எஸ்24 எப்இ மாடல்களில் பயன்படுத்தப்படும் 50எம்பி ப்ரைமரி சென்சார் தக்கவைக்கப்படலாம். இது 12எம்பி அல்ட்ராவைடு மற்றும் 10எம்பி டெலிஃபோட்டோவுடன் இணைக்கப்படலாம். இது சாம்சங்கின் முதல் பட்ஜெட்-விலை போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இஸட் பிளிப் எப்இ (Galaxy Z Flip FE) உடன் இணைந்து அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.1,09,999 என்றும், 12GB + 512GB ஆப்ஷன் ரூ.1,21,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ-ஆர்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 512GB மாறுபாட்டை 256GB விருப்பத்தின் விலையில் பெறலாம். அதாவது ரூ.12,000 தள்ளுபடியை பெறலாம்.
இதற்கிடையில் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.11, 000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.1,18,999 க்கு விற்பனை செய்து வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அமேசான் லிஸ்டிங்கின் படி இந்த விலை பேங்க் ஆபரை உள்ளடக்கிய விலை ஆகும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








