சீன் போட்ட சாம்சங்.. Huawei செய்த சம்பவம்: இந்த விலையில் இப்படி ஒரு போனா?

|

தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி என்பது அளப்பரியதாக இருக்கிறது. ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர்களில் நாம் காணும் அதீத முன்னேற்றங்களுக்கு நடுவில் சமீப காலமாக ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பிலும் வித்தியாசத்தை சந்தித்து வருகிறோம். ஃபோல்டபிள், ஃப்ளிப் என பல்வேறு வடிவமைப்புடன் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகிறது.

Huawei Pocket S ஸ்மார்ட்போன்

Huawei Pocket S ஸ்மார்ட்போன்

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் Huawei Pocket S ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. சீன நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஹார்மோனி ஓஎஸ்3 மூலம் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனானது 6.9 இன்ச் ஃபோல்டபிள் ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

Huawei அறிமுகம் செய்த பாக்கெட் எஸ் ஸ்மார்ட்போனானது 40 எம்பி பிரதான கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் கிராஃபைட் வெப்ப சிதறல் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Huawei Pocket S விலை

Huawei Pocket S விலை

Huawei Pocket S ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 10 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விலை

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 5,988 (தோராயமாக ரூ.67,900) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,488 (தோராயமாக ரூ.73,600) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 7,488 (தோராயமாக ரூ. 84,900) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. Huawei Pocket S ஸ்மார்ட்போனானது ஃப்ரன்ட் சில்வர், ஐஸ் க்ரிஷ்டல் ப்ளூ, மின்ட் க்ரீன், ஆப்சிடியன் ப்ளாக், ப்ரிம் ரோஸ் கோல்ட் மற்றும் சகுரா பிங்க் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

Huawei Pocket S சிறப்பம்சங்கள்

Huawei Pocket S சிறப்பம்சங்கள்

Huawei Pocket S சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 2,790 x 1,188 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய 6.9 இன்ச் ஃபோல்டபிள் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. டூயல் டிஸ்ப்ளே ஆதரவு இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே மூலம் நோட்டிபிகேஷன், டைம் உள்ளிட்ட பிற அறிவிப்புகளை அறிந்துக் கொள்ளலாம். இந்த டிஸ்ப்ளே ஆனது 340 x 340 பிக்சல்கள் தீர்மான ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Harmony OS 3 ஓஎஸ்

Harmony OS 3 ஓஎஸ்

இதன் வெளிப்புறத்தில் 1.04-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி சிப்செட் இடம்பெற்றுள்ளது. Harmony OS 3 மூலம் இயக்கப்படுகிறது இந்த புதிய Huawei Pocket S ஸ்மார்ட்போன்.

சிறந்த கேமரா, நீடித்த பேட்டரி ஆயுள்

சிறந்த கேமரா, நீடித்த பேட்டரி ஆயுள்

Huawei Pocket S ஸ்மார்ட்போனானது 40 எம்பி பிரதான கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என டூயல் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 10.7 எம்பி முன்புற கேமரா இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கிராஃபைட் வெப்பச் சிதறல் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் 40 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Finally Launched One Best Foldable Smartphone: Price and Specs of Huawei Pocket S

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X