Home
Mobile

கலக்குற Google.. சொன்னபடியே குறைவான விலை.. கம்பெனியின் முதல் ஃபோல்டபிள் போனாக Pixel Fold அறிமுகம்!

ஒருவழியாக கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போன் (First Foldable Phone) ஆக பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. எதிர்பார்த்தபடியே இது கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டின் போது, அதாவது கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வின் (Google I/O 2023 Event) போது அறிமுகமானது.

சொன்னபடியே பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானது சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4) மாடலை விட குறைவானதாக உள்ளது. அப்படி என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Google-ன் முதல் ஃபோல்டபிள் போனாக Pixel Fold அறிமுகம்!

பிக்சல் ஃபோல்ட் அம்சங்கள்: டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் வரும் வரும் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6 இன்ச் இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 5.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளேவும் உள்ளது.

அவுட்டர் டிஸ்பிளேவானது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது, இன்னர் டிஸ்பிளேவில் பிளாஸ்டிக் கோட்டிங் உள்ளது. எதிர்பார்க்கப்பட்டபடியே இது கூகுளின் டென்சர் ஜி2 ப்ராசஸர் (Tensor G2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனிற்கு 5 வருட பிக்சல் அப்டேட்ஸ் கிடைக்குமென்றும் கூகுள் உறுதியளிதுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்), சிஎல்ஏஎஃப் (CLAF) மற்றும் எஃப் / 1.7 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் ப்ரைமரி வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.

அதனுடன் 10.8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா + 121 டிகிரி பீல்ட் ஆஃப் வியூ மற்றும் எஃப் / 2.2 அபெர்க்ஷர் மற்றும் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 20 எக்ஸ் சூப்பர் ரெஸ் ஜூம் கொண்ட 10.8 மெகாபிக்சல் டூயல் பிடி டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது.

செல்பீ கேமராவை பொறுத்தவரை, அவுட்டர் டிஸ்பிளேவில் 1.22 பிஎம் பிக்சல் விட்த், எஃப் / 2.2 அபெர்க்ஷர் உடனான 9.5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இன்னர் டிஸ்பிளேவில் இன்னொரு செல்பீ கேமராவும் உள்ளது. அது எஃப் / 2.0 அபெர்க்ஷர் மற்றும் ஸ்டாண்டர்ட் ஃபோகஸை கொண்ட 8 மெகாபிக்சல் கேமராவாகும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத், ஜிபிஎஸ், கூகுள் கேஸ்ட், என்எஃப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களுடன் வரும் பிக்சல் ஃபோல்ட்டில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. கூடவே இது ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் 3 மைக்ரோஃபோன்களுடன் வரும் பிக்சல் ஃபோல்ட் ஆனது 30W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,821mAh பேட்டரியை பேக் செய்கிறது. கூகுளின் கூற்றுப்படி, இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கும் அதிகமான பிளேபேக் டைமும், 72 மணிநேரம் வரை ஸ்டேண்ட்பை டைமும் கிடைக்கும்.

பிக்சல் ஃபோல்ட் விலை விவரங்கள்: இது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 256ஜிபி ஆப்ஷன் இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,47,500 க்கும், 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,57,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4-ன் விலை ரூ.1,54,999 முதல் தொடங்குகிறது.

பிக்சல் ஃபோல்ட் விற்பனை விவரங்கள்: அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்செலைன் (Porcelain) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் பிக்சல் ஃபோல்ட் உடன் பிக்சல் வாட்ச் (Pixel Watch) இலவசமாக கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்படும். அடுத்த மாதம் முதல் உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Finally Google Launched Its First Foldable Phone Check Pixel Fold Price and Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X