'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

By Jeevan
|

பஸ்ஸுக்கு பணம் எடுத்து வருவதைக்கூட மறந்துவிடுவோம், ஆனால் செல்போன் எடுக்க மறப்போமா? இல்லவே இல்லை. மொபைல்போன்கள் இன்றைய சொல்லலில் அனைவராலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

செல்போன் பற்றிய அருமை பெருமைகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நாங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிய வாய்ப்புகள் குறைவே!

உதாரணத்திற்கு,
SMS அனுப்புகிறோம். அதில் ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு ஏன் 160 உருக்கள் என நிர்ணயித்தார்கள் தெரியுமா?. முதன்முதலில் யார் 'பிக்சர்' மெசேஜ் அனுப்பியதென்று தெரியுமா?. உலகிலேயே அதிகம் விற்பனையான போன் எதுவென்று தெரியுமா?. இன்னும் பல சுவாரஷ்யமான கேள்விகளுக்கும் உங்களுக்கு விடைதெரிய வாய்ப்பில்லை.

விடைகளும், விரிவான தகவல்களும் கீழே!

For More Pictures

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

பிலிப்பைன்ஸ் நாடுதான் உலகிலேயே அதிக SMSகளை அனுப்புபவர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. இங்குள்ளவர்களால் ஒவ்வொருநாளும் 14கோடி SMSகள் அனுப்பபடுகின்றன!

ஆரம்பத்தில் SMS சேவையானது இலவசமாகவே இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமானவுடன் கட்டணங்கள் நிர்ணயித்துவிட்டார்கள்.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

1985ல், 45 வயதுகள் மதிக்கத்தக்க ஆய்வாளரான பிரீதேல்ம் ஹிலெப்ரண்ட் தான் இந்த SMS களுக்கான எழுத்துருக்களின் அளவுகளை நிர்ணயித்தவர்.

ஒவ்வொரு மெசேஜும் குறிப்பிட்ட அளவுடைய எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் தொழில்நுட்பரீதியான பிரச்சனைகள் ஏற்படுமெனவும் தனது ஆய்வின்மூலம் விளக்கியவரும் இவரே!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

சீமென்ஸ் நிறுவனத்தால் 2001ல் வெளியிடப்பட்ட SL45 தான் உலகின் முதல் மியூசிக் போன் என்ற அந்தஸ்த்தை பெறுகிறது.

அப்பொழுதே இந்தபோனானது MP3 தரவுகளையும் சப்போர்ட் செய்யும்வகையில் இருந்தது.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

சொநிம் நிறுவனத்தின் XP3300 போன்தான் உலகிலேயே வலிமையான போன் என்ற கின்னஸ் சாதனையே புரிந்துள்ளது.

84அடி உயரத்திலிருந்து கீழே எறிந்தாலும் இந்தபோனானது உடையாதாம்.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

ஸ்டோர்ட் ஹுக்ஹெஸ் ஐபோன் 4 தான் உலகிலேயே விலையுயர்ந்த போன் என்ற பெருமையை பெறுகிறது. இதன் விலையானது இந்தியமதிப்பில் சுமார் ரூ.45 கோடிகளாகும்.

இதுவொரு வைரம் பதித்த போனாகும்.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

1997ல் ஜூன் மாதம் 11ம் நாள், பிலிப் கான் என்பரால் தான் முதன்முதலாக மொபைல் வழியாக போட்டோவானது அனுப்பப்பட்டது. இவர்தான் முதல் கேமரா போனை உருவாக்கியவர் என்பது கூடுதல் தகவல்.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

யாராலும் எளிதில் மறக்கமுடியாத நோக்கியா 1100 போன் தான் உலகிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட போன் என்ற பெருமையை பெறுகிறது. இந்த போனானது சுமார் 25 கோடி என்ற அளவில் விற்கபட்டதாம்.

2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதாரண போன் 2009 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு விற்பனையில் சாதனை படைத்ததென்றால் அது மிகையாகாது.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

ஜேம்ஸ் பாண்ட் 007 முதன்முதலில் பயன்படுத்திய போன் எதுதெரியுமா?. அந்த பெருமையை பெறுவது எரிக்சன் JB988 போனாகும்.

இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கானர், பாதுகாப்பு அமைப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அப்பொழுதே இருந்ததாம்.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

நோக்கியா நிறுவனம் தொடங்கப்பட்டது 1865ல். அப்பொழுது இந்நிறுவனத்தின் முதன்மை தொழிலானது பேப்பர்கள் உற்பத்திசெய்வதாகும். சில வருடங்களுக்கு பிறகு தனது தொழிலை மாற்றியது இந்நிறுவனம். அதாவது ரப்பர் வகை பொருள்கள் தயாரிப்பது, வயர்கள் தயாரிப்பது மற்றும் பின்லாந்து நாட்டு ராணுவத்திற்கு தகவல்கள் பரிமாற்றக்கருவிகளை விற்றது.

1980களில் தான் நோக்கியா நிறுவனம் மொபைல் போன்கள் தயாரிப்பில் இறங்கியது.

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

'செல்போன்' பற்றி உங்களுக்கு தெரியாதவை!

அமெரிக்கா மற்றும் அதுசார்ந்த நாடுகள் லேன்ட்லைன் போன்களை விட, செல்போன்களையே அதிகம் பயன்படுத்துகின்றன.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X