ஒன்ப்ளஸ் 6, கேலக்ஸி எஸ்9-ஐ ஓவர்நைட்டில் தூக்கி சாப்பிட்ட ஸ்மார்ட்போன்.!

எல்ஜி நிறுவனம், அதன் புதிய பிளாக்ஷிப் ஜி7 ThinQ மற்றும் G7 ப்ளஸ் ThinQ ஸ்மார்ட்போன்களை, இந்த வாரம் அறிமுகப்படுத்தியது.

|

எல்ஜி நிறுவனம், அதன் புதிய பிளாக்ஷிப் ஜி7 ThinQ மற்றும் G7 ப்ளஸ் ThinQ ஸ்மார்ட்போன்களை, இந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, ஹை-எண்ட் வன்பொருள் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 உடன் கடும் போட்டியை உண்டாக்கும் என்பதோடு சேர்த்து, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனிற்கும் சிக்கலை உண்டாக்கும் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 6, கேலக்ஸி எஸ்9-ஐ ஓவர்நைட்டில் தூக்கி சாப்பிட்ட ஸ்மார்ட்போன்!

குறிப்பாக எல்ஜி ஜி7 ThinQ ஆனது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி, இரட்டை கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆகியவைகளை கொண்டிருக்கிறது. இது சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6-க்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் என்ன என்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.?

சூப்பர் பிரைட் டிஸ்பிளே:

சூப்பர் பிரைட் டிஸ்பிளே:

ஓஎல்இடி பேனல் கொண்டுள்ள எல்ஜி ஜி7 தின்க் ஆனது 6.1 இன்ச் க்வாட் எச்டி+ டிஸ்பிலேவை கொண்டுள்ளது அது 3120 × 1440 என்கிற அளவிலான பிக்சல் தீர்மானம் மற்றும் 19: 5: 9 என்கிற அளவிலான புல் விஷன் "சூப்பர் பிரைட் டிஸ்ப்ளேவை" கொண்டுள்ளது. அதாவது இது சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களை விட இருமடங்கு அதிக ஒளியை வழங்கும். இருப்பினும், எல்ஜி ஜி7 ThinQ டிஸ்ப்ளேவின் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் பிரகாசம் மட்டும் அல்ல. இந்த புதிய சூப்பர் பிரைட் காட்சி தொழில்நுட்பமானது, ஆட்டோ, சுற்றுச்சூழல், சினிமா, விளையாட்டு, கேம் மற்றும் எக்ஸ்பெர்ட் போன்ற கலர் செட்டிங்ஸ்-ன் கீழ், வேறுபட்ட நிற அமைப்புகளை தானாக பிரதிபலிக்கும்.

எல்ஜி ஏஐ கேமரா:

எல்ஜி ஏஐ கேமரா:

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான ஏஐ கேம் ஆனது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட LG V30S தின்க் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளின் அடிப்படையிலான இந்த அம்சமானது, 19 ஷூட்டிங் மோட்களின் கீழ், பதிவாகும் புகைப்படங்களின் தரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் திரணிய கொண்டுள்ளது. உடன் குறைந்த ஒளி நிலைமைகளில், மேம்பட்ட புகைப்படங்களை எடுக்க உதவும், ஆட்டோமேட்டிக் பிரைட்நஸ் அட்ஜெஸ்ட்மெண்ட், போக்கே விளைவுகள் மற்றும் போர்ட்ரெயிட் மோட் போன்ற திறன்களையும் கொண்டுள்ளது.

3டி ஸ்டிக்கர்கள்:

3டி ஸ்டிக்கர்கள்:

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் உள்ள அனிமோஜி மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஏஆர் ஸ்டிக்கர்கள் போன்றே, எல்ஜி நிறுவனமும் கூட அதன் சொந்த 3D ஸ்டிக்கர்களை கொண்டுள்ளது. அது எல்ஜி ஜி7 தின்க் ஸ்மாட்ர்ட்போனில் பிரதிபலிக்கும். இது 2D மற்றும் 3D மேலடுக்குகளை உருவாக்கும் முக ஏற்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்:

பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்:

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம் அதன், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் ஆகும். இது பயனர்களின் ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த ஸ்பீக்கர், 6dB-க்கும் அதிகமான ஒலி அளவை அதிகரிக்கவும் மற்றும் பேஸ் ப்ரொடெக்ஷனை இரட்டிப்பாக்கவும் உதவும். மேலும், இந்த ஸ்பீக்கர் தொழில்நுட்பமானது, அதன் பேஸ் விளைவை அதிகரிக்க, இன்பில்ட் ஸ்பீக்கரை, ஒரு வூப்பர் ஆக மாற்றி, ஒரு சக்திவாய்ந்த "boombox" ஒலியை வழங்கும்.

அர்ப்பணிக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்

அர்ப்பணிக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்

எல்ஜி ஜி7 ThinQ ஸ்மார்ட்போன் ஆனது, கூகுள் அசிஸ்டென்ட்டை இயக்க உதவும், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் பட்டனை கொண்டுள்ளது. அதாவது ஓகே கூகுள் என்கிற சொற்றொடரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் இந்த பாட்டனை அழுத்தினால் போதும். அதாவது கூகுள் அசிஸ்டென்ட் உடன் பேசும் போது பட்டனை ஹோல்ட் செய்து இருப்பது போன்றே தான்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஐபி68 பாதுகாப்பு மற்றும் MIL-STD810G ஆயுள்

ஐபி68 பாதுகாப்பு மற்றும் MIL-STD810G ஆயுள்

எல்ஜி ஜி7 தின்க் ஆனது IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது 30 நிமிடங்கள் 1.5 மீ ஆழம் வரை தண்ணீரை தாக்குப்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக, இது MIL-STD 810G என்கிற இராணுவ தரநிலையையும் சந்திக்கிறது, இது ஸ்மார்ட்போனின் நீடித்த ஆயுளை உறுதிசு செய்யும்.

Best Mobiles in India

English summary
Features Which Make the LG G7 ThinQ a Worthy Contender to Other Flagships. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X