ஆண்ட்ராய்டின் தந்தையான ஆண்டி ரூபின் மிரட்டலான எசென்ஷியல் ஸ்மார்ட்போன்.!

Written By:

ஆண்ட்ராய்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஆன்டி ருபின் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தும் மென்பொருளை உருவாக்கியவர் ஆவார். இப்போது அவர் தனது சொந்த இரண்டு கேஜெட்களைக் உருவாக்கியுள்ளார் அவைகள் தான் - எசன்ஷியல் மொபைல் மற்றும் எசன்ஷியல் ஹாம்.

இதில் குறிப்பிடத்தக்க வண்ணம் எசன்ஷியல் மொபைல் ஆனது நம்மை மட்டுமின்றி இதர ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் சேர்த்தே பிரமிப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. இக்கருவியின் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முழுக்க முழுக்க டிஸ்பிளே

முழுக்க முழுக்க டிஸ்பிளே

இந்த போனின் முன்பக்கம் முழுக்க முழுக்க டிஸ்பிளே மூலம் நிரப்பப்பட்டுள்ளது. அதே சமயம் செல்பீக்களுக்கான ஒரு முன்பக்க கேமரா அமைப்பிற்கும் இடம் விடப்பட்டுள்ளது.

மெலிதான பெசல்கள்

மெலிதான பெசல்கள்

மிகவும் மெலிதான பெசல்கள் மற்றும் கீழே உள்ள ஒரு சிறிய தாடை பகுதியும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட முழு டிஸ்பிளே வடிவமைப்பு கொண்ட சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 கருவியின் பிரபலமான வடிவமைப்பு எதிரொலிக்கிறது (சாம்சங் நிறுவன கருவியை தொடர்ந்து விரைவில் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஐபோனையும் ஆப்பிள் இன்க் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

க்வால்காம் இன்க் செயலி

க்வால்காம் இன்க் செயலி

இந்த எசன்ஷியல் கைபேசியில் பல நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள் உள்ளன. க்வால்காம் இன்க் செயலி மற்றும் சார்ஜ் செய்யும் ஒரு யூஎஸ்பி- சி போர்ட் உள்ளிட்டவை உள்ளன.

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜர்

மேக்னடிக் கனெக்டர் உடனான ஒரு வயர்லெஸ் சார்ஜரை மையமாக கொண்ட இக்கருவி 360 டிகிரி புகைப்படங்கள் எடுக்க உதவும் கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல்

13 மெகாபிக்சல்

எசன்ஷியல் வலைத்தளத்தின்படி, இணைப்பு இல்லாமல் இந்த சாதனம் 8 மெகாபிக்சல் முன் பக்க கேமரா மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

டைட்டானியம்

டைட்டானியம்

ரூபின் நிறுவனத்தின் கூற்றுகளின்கீழ் இந்த தொலைபேசியின் பக்கங்கள் டைட்டானியம் கொண்டு தயாரிக்கப்படுகிறது, அது கீறல்களில் இருந்து கருவியை பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

செராமிக்

செராமிக்

செராமிக் பின்புறம் கொண்ட இந்த தொலைபேசி கருப்பு, சாம்பல், வெள்ளை, மற்றும் தங்கம் போன்ற ஓஷன் டெப்த் போன்ற வண்ணத்தில் வெளியாகிறது.

ஆண்ட்ராய்டு இயக்க முறைமை

ஆண்ட்ராய்டு இயக்க முறைமை

மேலும் இந்த சாதனம் தனிப்பயனாக்கப்பட்ட பயனர் இடைமுகத்துடன் ஆண்ட்ராய்டு இயக்க முறைமையின் கீழ் இயங்கும் மறுபக்கம் எசன்ஷியல் ஹோம் ஆனது ஆம்பியண்ட் ஓஎஸ் என்றவொரு கஸ்டம் சிஸ்டம் மூலம் இயங்கும்.

குரல்-செயல்படுத்தப்பட்ட

குரல்-செயல்படுத்தப்பட்ட

மறுபக்கம் உருவாக்கம் பெற்றுள்ள எசன்ஷியல் ஹோம் ஆனது பக்-அளவிலான, குரல்-செயல்படுத்தப்பட்ட ஒரு கருவி ஆகும். இதனால் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் நினைவூட்டல்களை வழங்கவும் முடியும்.

புதிய ப்ளேகிரவுண்ட்

புதிய ப்ளேகிரவுண்ட்

ரூபின் இந்த புதிய ப்ளேகிரவுண்ட் ஆனது உலகளாவிய காப்பீட்டாளரின் அவசியமான ஒரு பகுதியாகும், இது 300 மில்லியன் டாலர்களை திரட்ட திட்டமிடுகிறது.

கடும் பந்தயம்

கடும் பந்தயம்

இந்த புதிய தயாரிப்புகள் மூலம் ரூபின், சமீபத்திய ஆண்டுகளில் நுகர்வோர் வன்பொருள் ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் மற்றும் சாம்சங் மீது கடும் பந்தயத்தை உண்டாக்க முடியும் குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ப்ரீ ஆர்டரில் முன்கூட்டியே கிடைக்கக்கூடிய இந்த எசன்ஷியல் தொலைபேசி 699 டாலர் விலை நிர்ணயம் கொண்டுள்ளது. ஒரு நுழைவு-நிலை ஐபோனை விட 50 டாலர்கள் அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடங்கும் போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதர நாடுகளின் சந்தைக்கு எப்போது வரும் என்ற விவரம் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Father of Android Andy Rubin's 'Essential' smartphone looks stunning. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot