Home
Mobile

வாய் பிளக்கும் வாடிக்கையாளர்கள்.. ரூ.9,000 பட்ஜெட்ல இப்படி ஒரு போன்-ஆ.. Redmi நீ கலக்கு சித்தப்பு!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விலை மற்றும் அம்சங்களுடன் - சீன நிறுவனமான சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி - வருகிற மார்ச் 30 ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு தரமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

நாம் இங்கே பேசுவது - ரெட்மி 12சி (Redmi 12C) ஸ்மார்ட்போனை பற்றித்தான். முன்னரே குறிப்பிட்டபடி, இது வருகிற மார்ச் 30 ஆம் தேதியன்று இந்தியாவில் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு போன்-ஆ.. Redmi நீ கலக்கு சித்தப்பு!

மேலும் ரெட்மி 12சி மாடலானது இந்த 2023 ஆம் ஆண்டில், ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான எல்லா ஸ்மார்ட்போன்களை விடவும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக (Powerful Smartphone) இருக்குமென்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் உடன் வருகிறது.

பவர்ஃபுல் ஆன ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி ரெட்மி 12சி ஆனது ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் (ஊதா, கருப்பு, பச்சை மற்றும் நீலம்) அறிமுகமாகும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் ஏற்கனவே உலகளாவிய அறிமுகத்தை சந்தித்து விட்டது என்பதால், இதன் அம்சங்கள் குறித்து எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. க்ளோபல் வேரியண்ட்டில் உள்ள அதே அம்சங்கள் தான் இந்திய வேரியண்ட்டிலும் இடம்பெறும். நினைவூட்டும் வண்ணம், இது ஏற்கனவே இந்தோனேஷியா மற்றும் சீனாவில் அறிமுகமாகி விட்டது.

இந்தோனேஷியாவில் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.7,600 ஆகும். இதே ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.8,400 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் இது இந்திய சந்தையில் ரூ.10,000 க்குள், இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ரூ.9,000 க்குள் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ரெட்மி 12சி அம்சங்கள்: இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும். மேலும் இதில் 5ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேமிற்கான (Virtual RAM) ஆதரவும் கிடைக்கும். அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால் இன்டர்னல் ஸ்டோரேஜில் ரேம்-ஐ கடனாக பெற உதவும்.

இப்படியாக, விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 11 ஜிபி வரை நீட்டிக்க முடியும். போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போனில் 1டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கான ஆதரவும் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் டெப்த் மேப்பிங்கிற்கான க்யூவிஜிஏ (QVGA) கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேக் பேனலில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனானது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.71-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

கடைசியாக இது 10W சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதே மார்ச் 30 ஆம் தேதியன்று ரெட்மி நோட் 12 4ஜி மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது முன்னதாக இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Fastest Phone in Rs 10000 Segment Redmi 12C Available to Buy Via Amazon After March 30 India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X