பிரத்யேக நெட்வொர்க்கிங் மொபைலை களமிறக்க ஃபேஸ்புக் தீவிரம்!

By Super
|

பிரத்யேக நெட்வொர்க்கிங் மொபைலை களமிறக்க ஃபேஸ்புக் தீவிரம்!
கூடுதல் சோஷியல் நெட்வொர்க் தொழில் நுட்ப வசதிகளுடன் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுளளது. இதற்காக, அந்த நிறுவனம் எச்டிசி மொபைல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

ஃபேஸ்புக்கை இளம் வயதினர்கள் தான் பயன்படுத்துகின்றனர் என்று இல்லை. இப்பொழுது இந்த ஃபேஸ்புக் வசதியினை அனைவரும் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் ஃபேஸ்புக் முன்னிலை வகிக்கிறது.

எனவே, அதன் பயனாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதை உணர்ந்து கொண்டு அதிக சமூக வலைதளுக்கான வசதிகளை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. எச்டிசி மொபைல் நிறுவனத்துடன் இணைந்து புதிய போனை தயாரிப்பதற்கான பணிகளில் ஃபேஸ்புக் எஞ்சினியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் வாழக்கையில் ஃபேஸ்புக் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதனால் கூடுதல் வசதியை அளிக்கும் நெட்வொர்குடன், ஃபேஸ்புக் வசதியும் இருப்பதை அனைத்து வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். இதை மனதில் கொண்டு இந்த புதிய போனை ஃபேஸ்புக் வடிவமைத்து வருகிறது.

எச்டிசியும், ஃபேஸ்புக்கும் இணைந்து வெளியிடும் ஸ்மார்ட்போன் "பஃபி" என்ற பெயரில் வெளிவரும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய மொபைல் பற்றிய தகவலை வெளியில் விடாமல் எச்டிசி மொபைல் தயாரிப்பாளர்கள் ரகசியம் காத்து வருகின்றனர்.

இத்தகைய ஸ்மார்ட் மொபைல் வெளி வந்தால் நிச்சயம் மார்க்கெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X