பேஸ்புக் மெசன்ஜர் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மெசன்ஜர் கேம்களின் முதல் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய கேம் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

By Prakash
|

பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி மெசன்ஜர் கேம்களின் முதல் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய கேம் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது பேஸ்புக் மெசன்ஜர் செயலி.

பேஸ்புக் பொறுத்தவரை நாடு முழுவதும் அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இவற்றில் இடம்பெற்றுள்ள மெசன்ஜர் செயலியில் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைபடங்களை அனுப்ப வசதியாக உள்ளது.

 பேஸ்புக் மெசன்ஜர் :

பேஸ்புக் மெசன்ஜர் :

பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் 70க்கும் அதிகமான கேம்கள் மற்றும் உலகம் முழுவதும் 100-க்கு அதிகமான டெவலப்பர்களும் உள்ளனர், அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் தற்சமயம் இடம்பெற்றுள்ளது.

லைவ் ஸ்டிரீம் :

லைவ் ஸ்டிரீம் :

இப்போது பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் புதிய அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி கேம்களை நண்பர்களுக்கு லைவ் ஸ்டிரீம் செய்யும் வசதியும், அதன்பின்பு நண்பர்களுடன் உரையாடுவது போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த புதிய லைவ் ஸ்டிரீம் பயன்பாட்டை துவங்க கேம் திரையின் மேல் இருக்கும் புதிய கேமரா ஐகானை கிளிக் செய்தால் இவற்றை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைவ் ஸ்டிரீம் வீடியோ குறித்து சிறிய விளக்கத்தை பதிவிட முடியும், அதன்பின்பு நண்பர்களின் ப்ரோஃபைலில் பதிவிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மெசன்ஜர்  கிட்ஸ் செயலி:

மெசன்ஜர் கிட்ஸ் செயலி:

பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அந்தவரிசையில் குழந்தைகளுக்கான புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் அறிவித்த தகவலின் அடிப்படையில் 13-வயதிற்கும் குறைவான குழைந்தைகள் இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்கா:

அமெரிக்கா:

மெசன்ஜர் கிட்ஸ் செயலி பொதுவாக பெற்றோர் பயன்படுத்தும் பேஸ்புக் கணக்கிலேயே எக்ஸ்டென்ஷன் செய்யப்படும், மேலும் குழந்தைகளுக்கு தனி கணக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலி தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஷார்ட்கட் அம்சம் :

ஷார்ட்கட் அம்சம் :

பேஸ்புக் பொறுத்தவரை பதிவுகளில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்ட்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதன்படி இந்த புதிய ஷார்ட்கட் அம்சம் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger Instant Games to Get Live Streaming Video Chats, and More ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X