அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இலவச இன்டர்நெட்...!

By Keerthi
|

தற்போது உலக அளவில், ஏறத்தாழ 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை.

சிலர் இவற்றின் வழியே இணைய இணைப்பு பெறலாம் என்ற நிலையில் அது குறித்து யோசிப்பதே இல்லை.

சிலர், இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதனையே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நட்பு பாலத்தில் இணைப்பதற்குத் தன் நிறுவனம் உதவியாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தினைக் கொண்டு இயங்கும் பேஸ்புக் நிறுவனம், ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், இணைய இணைப்பினை இலவசமாகத் தருவது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது.

பல கோடி மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை இணையத்திற்கென பயன்படுத்தாத நிலையிலேயே, பன்னாட்டளவில், இணையம் வழியே கோடிக்கணக்கான பண மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இலவச இன்டர்நெட்...!

அனைத்து மக்களும் பயன்படுத்தும் காலம் வருகையில், நிச்சயம் இது பல மடங்காகப் பெருகும் வாய்ப்புள்ளது. சமுதாய நிலையிலும் மக்களிடையே மாற்றங்கள் பல ஏற்படும்.

எனவே தான், பேஸ்புக் எப்படியாவது, ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் இணைய இணைப்பினை இலவசமாக வழங்க முயற்சி எடுக்கிறது. இது குறித்து, ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன், பேஸ்புக் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X