அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி Mi Mix 4.!
சியோமி நிறுவனம் தனது Mi Mix 4 ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த சாதனத்தின் பல அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரவாகப் பார்ப்போம். அதன்படி இந்த புதிய சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் ஆனது MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இந்த சாதனம் அருமையாக பயன்படும். இதுதவிர இந்த சிப்செட் ஆதரவுடன் இந்த சாதனம் வேகமாகவும் செயல்படும். மேலும் சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போனின் மாடல் எண் 2106118C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் இந்த சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் டிஸ்பிளேவில் தனித்துவமான அம்சங்கள் இருப்பதாக சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் உடன் சியோமி மி பேட் 5 என்ற டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சியோமி மி பேட் 5 சாதனம் ஆனது 10.9-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் இந்த சியோமி மி பேட் 5 மாடல்.

சியோமி மி பேட் 5 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர 5ஜி ஆதரவுடன் இந்த புதிய சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. சியோமி மி பேட் 5 மாடலில் 8720 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்..

அதேபோல் சியோமி மி பேட் 5 மாடலின் பின்புறம் மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. வெளிவந்த தகவலின்படி 12எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்களுடன் இந்த சாதனம் வெளிவரும். இதுதவிர சியோமி மி பேட் 5 மாடலில்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்வைஃபை, என்எப்சி,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சியோமி மி பேட் 5 மாடல் வெளிவரும். குறிப்பாக சியோமி Mi Mix 4
ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Image source :mydrivers.com


Click it and Unblock the Notifications