Home
Mobile

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்.!

சியோமி நிறுவனம் விரைவில் புதிய சியோமி மி 12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது சியோமி மி 12 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி மி 12 ஸ்மார்ட்போன்

சியோமி மி 12 ஸ்மார்ட்போன்

சியோமி மி 12 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மிக வேகமாக செயல்பட வைக்கும் திறமை கொண்டது. அதேபோல் சியோமி 12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது

சியோமி மி 12 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த சியோமி மி 12 ஸ்மார்ட்போன்வெளிவரும்.

போல் 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ

அதேபோல் 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி மி 12 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனத்தின் மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 10ஐ 5ஜி

சியோமி மி 10ஐ 5ஜி

அதாவது சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த சியோமி மி 10ஐ ஸ்மார்ட்போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 5ஜி ஸ்மார்ட்போன் 6.67' இன்ச்

சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் உடன் கூடிய HDR மற்றும் HDR10 + டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனில் அட்ரினோ 619

இந்த மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் 8nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் வசதியும் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின்

சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

எச் பேட்டரி, 33 வாட் பா

தேபோல் 4820 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 5 ஜி, 4ஜி வோல்ட்-இ, வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளத இந்த சியோமி மி 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Xiaomi Mi 12 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X