அடேங்கப்பா எவ்ளோ பெரிய கேமரா: வெளியானது சியோமி மி11 அல்ட்ரா அம்சங்கள்.!
சியோமி நிறுவனம் எப்போதும் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் சிறந்த தொழில்நுட்ப
வசதியுடன் இநிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

சியோமி மி11 அல்ட்ரா
மேலும் இந்நிறுவனம் விரைவில் சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது சியோமி.

6.8-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே
வெளிவந்த தகவலின்படி, சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமானஅனுபவத்தை கொடுக்கும்.

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

8ஜிபி/12ஜிபி ரேம்
அதேபோல் சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

50எம்பி மெயின் கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி செகன்டரி சென்சார் + 48எம்பி periscope telephoto லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 120x zoom.ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications