Home
Mobile

அசத்தலான கேமரா வசதியுடன் களமிறங்கும் Xiaomi Mi 11.!

சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய சியோமி 11 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் அதன் லைவ் புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. பின்பு வெளியான புகைப்படங்களின் மி 11 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, வண்ணம் மற்றும் சில பிரதான அம்சங்களை நமக்கு பரிந்துரைக்கின்றன.

தகவலின்படி இந்த

அண்மையில் வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனறும், அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் கேமராக்கள், மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

6-இனச்

சியோமி மி 11 ஸ்மாரட்போன் ஆனது 6-இனச் கியூஎச்டி 10 அமோலேட் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 பிகசல் தீர்மானம மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்வெளிவரும்.

 க்ளாக்டு குவால்காமின் முதன்மை

மி 11 ஸ்மார்ட்போன் ஆனது நான்கு வண்ண விருப்பங்களின் கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இது ஆண்ட்ராய்டு 11 இன் நவம்பர் பாதுகாப்பு இணைப்புடன், மேலே MIUI 12 உடன் இருப்பதைக் காட்டுகிறது. அந்த டிஸ்பிளே மி 11 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 2.84GHz இல் க்ளாக்டு குவால்காமின் முதன்மை ஸ்னாப்டிராகன் 888 SoC போன்றவைகளின் இருப்பை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெசல்யூஷனையும் டிஸ்பிளேவில் சேர்

மி 11 ஸ்மார்ட்போனில் மெல்லிய பெஸல்லெஸ் மற்றும் கர்வ்டு டிஸ்பிளே வடிவமைப்பு உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்து. புதிய மி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வரும் என்றும் கூறப்படுகிறது, மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரெட் கொண்ட QHD + ரெசல்யூஷனையும் டிஸ்பிளேவில் சேர்க்கலாம்.

புகைப்படம் மி 11

மேலும் வெளியான மற்றொரு புகைப்படம் மி 11 ஸ்மார்ட்போனின் பின்புறத்தைக் காட்டுகிறது. அதில் ஒரு மேட் இருப்பதாகத் தெரிகிறது. பின்பு எல்.ஈ.டி ஃபிளாஷ் உடனான ட்ரிபிள் ரியர் கேமராக்களின் இருப்பையும் காட்டுகிறது.

13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள்

இநத மி 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார்+ 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் + 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32 எம்பி செல்பீ கேமராஆதரவுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ஜிங்-ஆதரவு

மி 11 ஸ்மார்ட்போனில் 2390 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்றும், பின்பு 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்றும் வதந்திகள் பரவியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங்-ஆதரவு சார்ஜருடன் தொகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Xiaomi Mi 11 smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X