ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் உடன் வெளிவரும் சியோமி மி 11.!
சியோமி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் லேப்டாப், ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

சியோமி நிறுவனத்தின் மி 10 ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுலதும் அதிக வரவேற்பு இருந்தது, காரணம் அருமையான மென்பொருள் வசதி, 108எம்பி கேமரா உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது தான். இந்நிலையில் சியோமி மி 11 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம்.

அதன்படி சியோமி மி 11 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தி மி 11 ஸ்மார்ட்போனிலும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்க்காத ஒரு சிறப்பான அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
மேலும் இப்போது வெளிவந்த தகவலின்படி சியோமி மி 11 ஸ்மார்ட்போனில் 48எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மி 11 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 660 ஜிபியு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சியோமி மி 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட மி 10 ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றது. மேலும் விரைவில் களமிறங்கும் சியோமி மி 11 ஆனது ஸ்னாப்டிராகன் 875 சிப்செட் உடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
கண்டிப்பாக சியோமி மி 11 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications