Home
Mobile

12ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 ப்ரோ.!

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி 11 ப்ரோ ஸமார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப வசதியடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளது, அதைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.

12ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 ப்ரோ.!

சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இது கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு மிக அருமையாக உதவும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

12ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 ப்ரோ.!

சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா, 48எம்பி செகன்டரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு எனறே இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஆன்லைளில் வெளிவந்த தகவலின்படி,இந்த ஸ்மார்ட்போனில் 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 120Hz refresh rate, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 67-இன்ச் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

12ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 11 ப்ரோ.!

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Xiaomi Mi 11 Pro smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X