தனித்துவமான நிறங்களில் வெளிவரும் சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன.
மேலும் சியோமி நிறுவனம் வரும் ஜூன் 22-ம் தேதி Tuscany Coral, Jazz Blue, Vinyl Black நிறங்களில் சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக புதிய நிறங்களில் வெளிவரும் இந்த சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் இப்போது சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக்கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

4250 எம்ஏஎச் பேட்டரி
சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதுதவிர கைரேகை சென்சார் வைஃபை 6, புளூடூத் 5.2, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications