67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் அட்டகாசமான சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போன் மாடல் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு
12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சியோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 33Wh பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன். ப்ராக்ஸிமிட்டி சென்சார்,கைரோஸ்கோப் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications