ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் உடன் வெளிவரும் சியோமி 12 ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் சியோமி 12 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இப்போது வெளிவந்த தகவலின்படி, சியோமி 12 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 12 ஸ்மார்ட்போன்.

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சியோமி 12 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சியோமி 12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

அதேபோல் சியோமி 12 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுகூறப்படுகிறது. பின்பு கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக
சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம்
செய்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ
சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. பின்பு MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்த அருமையாக இருக்கும்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ மாடலின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி உள்ளிட்டபல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது சியோமி 11 லைட் 5ஜி என்இ.
அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ மாடல் ரூ.26,999-விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட சியோமி 11 லைட் 5ஜி என்இ மாடல் ரூ.28,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications