Home
Mobile

6.58-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ Y31s ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y31s ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான கேமராக்கள, சிறப்பான மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆன்லைனில் கசிந்த விவோ Y31s ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y31s

விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 பின்புறம் 13எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ Y31s

விவோ Y31s ஸ்மார்ட்போனில் 4ஜிபி.6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y31s

விவோ Y31s ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களில் இந்த சாதனம் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி

வெளிவந்த தகவலின்படி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான சாதனம்.

டூயல் 4ஜி வோல்ட்இ,

விவோ Y31s ஸ்மார்ட்போனில டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அறிமுகம் செய்யப்படும் என

குறிப்பாக விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Vivo Y31s Smartphone And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X