5ஜி போன் வாங்க ஐடியா இருக்கா? கொஞ்சம் பொறுங்க: வருது சூப்பர் விவோ Y30 5ஜி மாடல்.!

|

ஒப்போ, மோட்டோ நிறுவனங்களை விட அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது விவோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட்போன்களில் தனித்துவமான டிஸ்பிளே மற்றும் தரமான சிப்செட் உள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது.

விவோ Y30 5ஜி

விவோ Y30 5ஜி

இந்நிலையில் விவோ நிறுவனம் புதிய விவோ Y30 5ஜி எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக கடந்த 2020-ம்ஆண்டு இந்நிறுவனம் விவோ Y30 4ஜி மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio + Redmi சேர்ந்து செஞ்ச வேலையை பார்த்தீங்களா? Redmi K50i 5G ரிசல்ட் சூப்பராம்ல! 2 பேரும் ஓவர் குஷி!Jio + Redmi சேர்ந்து செஞ்ச வேலையை பார்த்தீங்களா? Redmi K50i 5G ரிசல்ட் சூப்பராம்ல! 2 பேரும் ஓவர் குஷி!

 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

தற்போது புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் விவோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள விவோ Y30 5ஜி போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் Smartphone வாங்க அசையா? ரூ.6,699 இருந்தா போதுமே! இந்த போன்லாம் வாங்கலாம்கம்மி விலையில் Smartphone வாங்க அசையா? ரூ.6,699 இருந்தா போதுமே! இந்த போன்லாம் வாங்கலாம்

விவோ Y30 5ஜி டிஸ்பிளே

விவோ Y30 5ஜி டிஸ்பிளே

விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஸ்பிளே வசதிக்கு தற்போது போன் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த விவோ போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். புதிய விவோ Y30 5ஜிடிஸ்பிளேவை விட சிப்செட் தான் அருமையாக உள்ளது.

சின்ன சைஸ் சூட்கேஸ் போன்று லேப்டாப் அறிமுகம் செய்த Panasonic: விலை எவ்வளவு தெரியுமா?சின்ன சைஸ் சூட்கேஸ் போன்று லேப்டாப் அறிமுகம் செய்த Panasonic: விலை எவ்வளவு தெரியுமா?

 அட்டகாசமான சிப்செட்

அட்டகாசமான சிப்செட்

விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சிப்செட் கேமிங் வசதிக்கு மிக அருமையாக பயன்படும். குறிப்பாக இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க போன், டேப்லெட், லேப்டாப் பழுது பார்க்க இனி உங்க போன், டேப்லெட், லேப்டாப் பழுது பார்க்க இனி "ரைட் டு ரிப்பேர்" சட்டம்! இனி யாரையும் ஏமாற்ற முடியாது!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கூட இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

விரைவில் வெளிவரும் விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானவிவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன்.

iPhone 14-க்கு முன்னதாக iPhone 15, 16 பற்றி வெளியான ரிப்போர்ட்! இது ரொம்ப அட்வான்ஸா இருக்கே ஆப்பிள்?iPhone 14-க்கு முன்னதாக iPhone 15, 16 பற்றி வெளியான ரிப்போர்ட்! இது ரொம்ப அட்வான்ஸா இருக்கே ஆப்பிள்?

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

புதிய விவோ போனின்மிக முக்கயமான வசதி என்னவென்றால் அது பேட்டரி வசதி தான். அதாவது இந்த விவோ Y30 5ஜி மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ஏன் Asus ZenFone 9 போனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? விஷயம் 'இது' தான் பாஸ்!ஏன் Asus ZenFone 9 போனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா? விஷயம் 'இது' தான் பாஸ்!

  கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை, 5ஜி, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த புதிய விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ Y30 5ஜி ஸ்மார்ட்போன்.

 விவோ Y77 5ஜி

விவோ Y77 5ஜி

இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தரமான சிப்செட் வசதியுடன் விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விவோ Y77 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2408 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

மீடியாடெக் Dimensity 930 சிப்செட்

அதேபோல் மீடியாடெக் Dimensity 930 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4500 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்

மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது புதிய விவோ Y77 5ஜி.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Vivo Y30 5G smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X