44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் விவோ எஸ்12 ப்ரோ.!
விவோ நிறுவனம் விரைவில் விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் செல்பீ கேமரா, தனித்துவமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாடல் எண் V2162A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
வெளிவந்த தகவலின்படி விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே டூயல் செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ எஸ்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த சாதனம் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சானத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு 8ஜிபி ரேம், 128ஜிபி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 460 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
விவோ Y76 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட்
வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ Y76 5G. விவோ Y76 5G ஸ்மார்ட்போனில் புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ,யுஎஸ்பி ஒடிஜி, டூயல் சிம் ஆதரவு, கைரேகை சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் என பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விவோ நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications