6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் வெளிவரும் விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான வடிவமைப்புடன் தனித்துவமான அமசங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தற்போது ரியல்மி, சியோமி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் விவோ நிறுவனமும் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அதன்படி விரைவில் வெளிவரும் விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப்
பார்ப்போம்.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 1080 பிகசல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனில் 2.44ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் Dimensity சிப்செட் வசதி தான்அதிகம் இடம்பெறுகின்றன.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் கேமராக்களை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 3970 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன்.அதேபோல் விவோ நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை
அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட தனித்துவமான அம்சங்களுடன் விவோ நிறுவனத்தின் டேப்லெட் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: TENAA


Click it and Unblock the Notifications