Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

அதன்படி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.8-இன்ச் வளைந்த டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா வசதி உள்ளது. மேலும் பில்ட் இன் எஸ் பென் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படலாம். குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்
45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Awesome Black, Awesome Violet மற்றும் Awesome White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!

அதேபோல் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்தியாவில் இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy S22 Ultra smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X