ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேலக்ஸி எஸ்22
ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் ஸமார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்கள் தனித்துமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெறுகிறது. அதேபோல் விரைவில் வெளிவரும் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்இந்த சிப்செட் வசதி இருப்பதால் விலையும் சற்று உயர்வாக இருக்கும்.

அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பும் மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகைசென்சார்என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications