Home
Mobile

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடல்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-S906Uஎன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போனில் 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4500 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ22எஸ்

கேலக்ஸி ஏ22எஸ்

இந்த கேகேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் மாடலில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் வசதி மிக வேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பின்புறம் 48எம்பி பிரைமரி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் மாடல்.

பாஸ்ட் சார்ஜிங்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22எஸ் மாடல்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy S22 Plus smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X