Home
Mobile

தரமான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் கேலக்ஸி எஸ்21 எஃப்இ.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். தற்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் SM-G9900 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.4-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 2340 x 1080 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேசமயம் கேமிங் உட்பட பல்வேறு செயலிகளை வேகமாக பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

. பின்பு எல்இடி பிளாஸ், செய

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் 12எம்பி வைடு லென்ஸ் மற்றும் 8எம்பி சென்சார் வசதி கூட இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி எஸ்21 எஃப்இ. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

256ஜிபி உள்ளடக்க

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வ

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனில் 4370 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4 ஜி எல்டிஇ, புளூடூத், வைஃபை

5 ஜி ஆதரவு, 4 ஜி எல்டிஇ, புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் ரூ.40,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy S21 FE smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X