Home
Mobile

விரைவில் 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி.!

சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ மாடல் வரும் ஜனவரி 4-ம் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி.!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி வேகமாக செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விரைவில் 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி.!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.1, GPS, USB Type-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் தரமான சிப்செட் வசதியுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால் நல்ல
வரவேற்பு உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ 5ஜி.!

அதேபோல் சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் கேலக்ஸி எஸ்8 டேப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்8 எஃப்இ மாடல்களை தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy S21 FE 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X