Home
Mobile

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் அம்சங்கள்.!

சாம்சங் நிறுவனம் வரும் மார்ச் 27-ம் தேதி புதிய கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். அதேபோல் இந்த போன் முதலில் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்53.!

சாம்சங் கேலக்ஸி எம்53

சாம்சங் கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 SoCசிப்செட் வசதி. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்53.!

குறிப்பாக கேலக்ஸி எம்53 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் சமீபத்தில்இந்நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்53.!

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12 அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். புதிய கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்53.!

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பறறிய கவலை இருக்காது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 189 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy M53 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X