Home
Mobile

64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி ரியர் கேமரா, தனித்துவமான சிப்செட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு
ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy M52 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X