சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை வெளியானது .! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்களுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி
மேலும் இந்நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றிய விரிவானதகவல்களைப் பார்ப்போம்.

வெளியான தகவலின் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சாதனம் ஆனது ரூ.20,000 அல்லது ரூ.25,000-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு
கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
இந்த கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

6000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெரும். பின்பு 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications