ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி.!
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி

வெளிவந்த தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் அட்ரினோ 629 ஜிபியு ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
சாம்சங் கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1080 × 2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய கேலக்ஸி எம்23 5ஜி ஸ்மார்ட்போனில 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம்
செய்த சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. அதேபோல் இந்தசாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் UNISOC T606 பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் இடம்பெற்றுள்ளன.. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பிகேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறுசிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 மாடல்.எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இல்லை.குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன்.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.10,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.11,999-ஆக உள்ளது. லைவ் ஃபோகஸ், பியூட்டி மோட் மற்றும் ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications