விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம்02.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம்.

தற்சமயம் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 1.80ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் பிராசஸர் வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி எம்02 சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெறும். பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டைனமிக் ஸ்கிரீன் டைம்அவுட் மற்றும் புத்திசாலித்தனமான உள்ளீடுகளுடன் இந்த கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் 'மேக் இன் இந்தியா' அம்சங்களுடன் வருகிறது. சாம்சங்கின் புதிய அறிமுகமான இந்த போனில் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் அதிகபட்ச ஆற்றல் சேமிப்பு பயன்முறையுடன் வருகிறது. மேலும் டார்க் மோடு பயன்முறையையும் இது கொண்டுள்ளது. சாம்சங்கின் அனைத்து ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த போன் விற்பனைக்குக் கிடைக்கிறது.
டைனமிக் ஸ்கிரீன் அவுட் மற்றும் பவர் ஆப்டிமைசேஷனுடன் கூடிய டிஸ்பிளே அம்சம் போன்ற பல்வேறு மேக் இன் இந்தியா அம்சங்களை இதில் சேர்த்துள்ளது. மேலும், சாதனம் ஒரு புத்திசாலித்தனமான புகைப்பட அம்சத்துடன் வருகிறது, இது ஒத்த புகைப்படங்களைத் தானாகவே கண்டறிந்து, சிறந்த புகைப்படங்களைக் கொண்ட பயனர்களை அறிவுறுத்துகிறது, அதே நேரத்தில் மற்ற படங்களை நிராகரிக்கும்போது உகந்த உள் சேமிப்பிடத்தை தருகிறது.

சாம்சங் கேலக்ஸி M01 சிறப்பம்சம்
5.71' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 439 பிராசஸர்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு
டூயல் கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
2 மெகாபிக்சல் கொண்ட அடெப்த் சென்சார்
5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
4 ஜி வோல்டிஇ
வைஃபை
புளூடூத்
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
எஃப்எம் ரேடியோ
மைக்ரோ-யூ.எஸ்.பி
3.5mm ஆடியோ ஜாக்


Click it and Unblock the Notifications