விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-526B/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் Dusky Black மற்றும் Magic White நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஎஃப்டி டிஸ்பிளே வசதி மற்றும் 1080×2408 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத்,ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி
உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்.

மேலும் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ03எஸ் சாதனம் வெளிவரும்.


Click it and Unblock the Notifications