6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் அனைத்து சிறப்பம்சங்களும் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ72
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400x1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 11
வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும.

64எம்பி பிரைமரி லென்ஸ்
கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக். முன்பு குறிப்பிட்டபடி இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications