அசத்தலான சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ53

சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A536E என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 1200 சிப்செட் அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி அதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5G, 4G வோல்ட்இ, டூயல் சிம் ஸ்லாட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASS உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம்
செய்த சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு கோ 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமராஅம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் ஸ்லாட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASSஉள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications