தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது
கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் அட்ரினோ 642ஜிபியு ஆதரவும் உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் Mali-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. மேலும் One UI Core சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. அதேபோல் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன். குறிப்பாக ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் இந்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் சாதனம் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Expected features of the upcoming samsung galaxy a52s smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X