64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்போன்மாடல்.

இந்த சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் ரூ.38,500-விலையில்அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications