இந்தியா: விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் விரைவில் கேலக்ஸி 5ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா ஸ்மார்ட்போன்

கடந்த மாத துவகத்தில் ஐரோப்பா ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்த
ஸ்மார்ட்போன் இப்போது இந்திய தரநிலைகளின் பணியகம் (BIS) இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில்மாடல் எண் SM-A526B / DS உடன் சாம்சங் கேலக்ஸி A52 இன் 5 ஜி வேரியண்ட் காணப்பட்டுள்ளது.

 இதற்கு முன்பாக புளூடூத்

இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பாக புளூடூத் எஸ்.ஐ.ஜி வலைத்தளத்திலும் தோன்றியது. இது வழக்கமாக பெரும்பாலான தயாரிப்புகளுடன் நடப்பதால், கேலக்ஸி ஏ 52 5 ஜி இந்தியாவில் சில வாரங்களுக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனை தொடர்ந்து இப்போது பிஐஎஸ் இணையதளத்தில் தோன்றியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 'உலக அதிசய' படம்.. இது எந்த இடம் என்று தெரிகிறதா? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட 'உலக அதிசய' படம்.. இது எந்த இடம் என்று தெரிகிறதா? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 52 5 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 52 5 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவுடன் எஃப்.எச்.டி பிளஸ் கொண்ட ஸ்கிரீன் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் யுஐ 3.1 உடன் கூடிய 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவை ஆதரிக்கிறது. மேலும் இது அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான இயங்குதளத்தில் இயங்குகிறது. பாதுகாப்பைப் பொருத்தவரை, கேலக்ஸி ஏ 52 5 ஜி இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

குவாட்-கேமரா அமைப்பு

குவாட்-கேமரா அமைப்பு

கேமராவை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 64 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு, சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி உடன் 32 எம்.பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது.

 ஸ்டோரேஜ் விருப்பம்

ஸ்டோரேஜ் விருப்பம்

இந்த புதிய 5ஜி வேரியண்ட் ஸ்மார்ட்போன் இரண்டு உள்ளமைக்கப்பட்ட சேமிப்பக விருப்பங்களுடன் வருகிறது, 128 ஜிபி மற்றும் 256ஜிபிஆகிய மாடல்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை
ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கின்றது.

ஏ52 5ஜி ஸ்மார்ட்போன்

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இந்திய விலை பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும். ஐரோப்பா சந்தையில் அடிப்படை வேரியண்ட் மாடல் ரூ.30,000 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy A52 5G smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X