அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்க்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் வெளிவரும்.

வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் MT6853V மூலம் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது Dimensity 72 வசதியாகும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மேலும் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ32 5ஜி சாதனத்தில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்.

கண்டிப்பாக இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் SM-A326J என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications