அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல ஆப் வசதிகளை வேகமாக இயக்க உதவுகிறது என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த அசத்தலான கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications