Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம்

இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
மேலும் இதற்குமுன்பு வெளியான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்52 5ஜி

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கமெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்52 5ஜி

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்டபோன். குறிப்பாக சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy A13 5G smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X