அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 (2021)
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 8 (2021) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண்M1908C3JGG என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புளூடூத் 5.2 ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 8 (2021)
மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 (2021) மாடல் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இதுதவிர 4000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி மெயின் கேமரா, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 22.5 5வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு ரெட்மி நோட் 8 (2021) மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் மாலி-ஜி76 3EEMC4 GPU ஆதரவும்உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் சாதனம்.

இந்த புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
Hi-Res ஆடியோ டூயல்-ஸ்பீக்கர்கள், ஸ்பிளாஸ்-ப்ரூஃப் வடிவமைப்பு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications